வீரவாஞ்சிநாதன் கிளை
18-12-2025 அன்று கிளையின் சார்பாக 2026ம் ஆண்டிற்கான காலண்டர் வெளியீட்டு நிகழ்வு கடவுள் வாழ்த்து, வேத கோஷம், உறுதிமொழியுடன் துவங்கியது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். மதுரை மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெயஸ்ரீ காலண்டரை வெளியிட்டார். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீகுமார் மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.நடராஜன், கிளை துணைத் தலைவர் ஸ்ரீமதி.வசந்த கோகிலம், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.லெக்ஷ்மி காளமேகம், செயலாளர் ஸ்ரீமதி.ராணிதிரிபுரசுந்தரி, ஸ்ரீமதி.சாந்தா, ஸ்ரீமதி.உமாகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீமதி.ராணி திரிபுரசுந்தரி நன்றியுரையாற்றினார்.
|