"இந்து மக்கள் கட்சித் தலைவர்அர்ஜுன் சம்பத் அவர்கள் அனைத்து காலகட்டங்களிலும் பிராமண சமூகத்திடம் நல் எண்ணம் கொண்டவர். ஆனால் அவர் திடீரென்று பிராமண சமூகத்திற்காக நிகழ்ச்சிகள் நடத்துவதில் உள்நோக்கம் உள்ளதா என்பதனை அவரிடம் தான் கேட்க வேண்டும். நம்மைப் பொறுத்தவரை சென்னை நிகழ்ச்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்து மிகப்பெரும் கூட்டத்தினை கூட்டி நம் சமூகத்தினரின் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டோம்.
இந்து மக்கள் கட்சி என்பது ஓர் அரசியல் கட்சி. அதனால் அர்ஜுன் சம்பத் அரசியல் விஷயங்களை அன்றாடம் கையாண்டு வருகிறார். அதற்கு அவருக்கு உரிமையும், கடமையும் உண்டு.
ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஓர் சேவை நிறுவனமாக நாம் செயல்பட்டு வருகின்றோம். நாம் அன்றாட அரசியலில் ஈடுபடுவதில்லை. அதனால் தமிழ்நாடு பிராமணர் சங்கம் இயக்கரீதியாக அவருடைய அனைத்து நிகழ்ச்சிகளிலுல் கலந்து கொள்வது என்பது நடைமுறை சாத்தியம் இல்லை.
பல தாம்ப்ராஸ் மாவட்டத் தலைவர்களுக்கும் நாம் அன்றாட அரசியலில் ஈடுபடுவது பிடிக்கவில்லை. தாங்கள் இந்த கேள்வியை எழுப்பியதற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.