என் கேள்விக்கென்ன பதில்

தெரு நாய்கள் விஷயம் பட்டி தொட்டி முதல் துவங்கி தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டதே ?

- டி.சேஷாத்ரி, கடலூர்


"பல இடங்களில் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பதும், கடித்து குதறுவது என்பதெல்லாம் அதிகமாகி வருகின்ற காரணத்தினால் தெரு நாய்களை எல்லாம் ஊக்குவிக்கக்கூடாது என்கின்ற கருத்து விவாதமாகி தற்போது உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. இவ்விஷயத்தில் சராசரி பொதுமக்கள் பார்வையும் பிராணிகளை நேசிப்பவர்கள் மற்றும் நாய் பிரியர்கள் பார்வையும் வெவ்வேறாக உள்ளன. சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடைமுறை சாத்தியமானால் ஓரளவு தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படும் என்று சொல்லப்படுகின்றது.


ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்து மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதே ?

- கே.ஸ்ரீமதி, நாகர்கோவில்


"அவசியமான சட்டம். பல குடும்பங்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தினை இழந்து அவர்களது குடும்பங்கள் சின்னா பின்னமாகி உள்ளன. பல தற்கொலைகளும் நடந்துள்ளன. ஆகையால் இந்த சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.


தமிழகத்தில் ஹிந்துக்கள் இடையே ஒற்றுமை உணர்வு என்பது அதிகரித்து வருகின்றதே?

- மாதவராமன், கிருஷ்ணகிரி


"அதிகரித்து வருகின்றது, ஆனால் எதிர்பார்த்த வேகத்திலும் அளவிலும் இல்லை. இதில் விஷயம் என்னவென்றால் தமிழர்களுக்கு ஜாதிகள் மீது இருக்கக்கூடிய ஈடுபாடும் ஆர்வமும் ஹிந்து ஒற்றுமையில் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தில் நமது மாநிலத் தலைவர் அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் நாம் பிராமண ஒற்றுமைக்கும், ஹிந்து ஒற்றுமைக்கும் பாடுபடுவோம் என்று வலியுறுத்தி வருவது யாவரும் அறிந்ததே.

Youtube Channel
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS