என் கேள்விக்கென்ன பதில்

ஒரு கூட்டத்தில் தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர் அவர்கள் இந்தியாவின் அரசியல் சீர் திருத்தத்தில் ஓர் அங்கமாக மூன்றே மூன்று கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சொன்னாரே? அவர் என்ன தான் சொல்ல முன் வருகிறார் ?

- வி.விஸ்வநாதன், நாகர்கோவில்


" அவர் சொல்வது மூன்று தேசிய கட்சிகள் மட்டுமே இருக்கக்கூடிய ஜனநாயக அமைப்பு. உதாரணமாக:
1. சோஷியலிச கொள்கை கொண்ட காங்கிரஸ் கட்சி
2. வலது சாரி கொள்கை கொண்ட பாரதீய ஜனதா கட்சி
3. இடது சாரி கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி
இது போன்று மூன்று தேசிய கட்சிகள் மட்டும் அனுமதிக்கப்படுமேயானால் நமது நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்கிடும். மொழி இன மற்றும் பூகோள அடிப்படையிலான குறுகிய அணுகுமுறை கொண்ட பிற்போக்கு இயக்கங்கள் காணாமல் போய் விடும். பாரதம் மிக வேகமாக வளர்ச்சியினை கண்டு ஓர் பெரும் வல்லரசாக உருவாகிடும் நன்னாள் விரைவாக வந்திடும். இந்த கருத்தினை பல அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஏற்றுக் கொள்ள முன் வரமாட்டார்கள். ஆகையினால் இது ஓர் பகல் கனவாக மட்டுமே இருந்திடும்.

Youtube Channel
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS