என் கேள்விக்கென்ன பதில்

தமிழகத்தில் சமீப மாதங்களாக போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பது மட்டுமின்றி பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது எதனால் ?

- எஸ்.குமார், விழுப்புரம்


"பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு முதல் காரணமாக விளங்குவது போதைப் பொருட்கள். 2வது காரணமாக விளங்குவது யூடியூப் சேனல்கள். இதில் விரசமான காட்சிகள் அதிகம் வருவதனாலும் சில ஆண்கள் மனது பாதிக்கப்பட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக மனோதத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.


எதிர்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணி ஒற்றுமை இல்லாமல் சிதறிவிடும் போல் இருக்கின்றதே ?

- ஆர்.ரமேஷ், ஸ்ரீரங்கம்


"உண்மை தான். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் குறிப்பாக திரு.ராகுல் காந்தி அவர்களின் செயல்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகின்றது. மேலும் சில இடங்களில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்குள் கடும் போட்டி உருவாகி வருவதாக சொல்லப்படுகின்றது.


சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டங்களில் எதிர்கட்சிகள் கோஷம் போட்டுக் கொண்டும், எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டும் தொடர்ந்து செயல்படுவதனால் மக்களவையும், மாநிலங்களவையும் நடத்த முடியாமல் போய் விட்டதே. இது பொறுப்பற்ற செயல் இல்லையா ?

- எஸ்.விஸ்வநாதன், மயிலாடுதுறை


"இது பொறுப்பற்ற செயல் தான். ஆனால் இதே போன்ற நடவடிக்கைகளில் கடந்த கால கட்டங்களில் பாஜகவும் ஈடுபட்டுள்ளது. மக்கள் நலனைவிட தங்களுடைய சந்தர்ப்பவாத அரசியல் முக்கியம் என்று நினைக்கின்ற அணுகுமுறை மாற்றப்பட வேண்டும். இந்த மாற்றம் எல்லா அரசியல் கட்சிகளிடமும் உருவாக்கப்பட வேண்டும்.

Youtube Channel
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS