என் கேள்விக்கென்ன பதில்

ஒரு சிலர் திரு.ராகுல் காந்தி அவர்களை விட அவருடைய சகோதரி திருமதி.பிரியங்கா காந்தி அவர்கள் தெளிவான அரசியல் செய்வதாக சொல்கிறார்கள். இது சரியா ?

- எஸ்.குப்புஸ்வாமி, திருநெல்வேலி


"ஒரு சில சமயங்களில் பிரியங்கா காந்தி அவர்களுடைய பேச்சு அர்த்தமுள்ளதாகவும் முதிர்ச்சி அடைந்த அரசியல் தலைவர் பேசுவது போல் இருக்கின்றது. ராகுல் காந்தி அவர்களோ அள்ளித் தெளித்த கோலம் அவசரக் கோலம் என்று பேசுவதாக பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தினை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாததனால் யாருக்கு நஷ்டம் ?

- கே.ரமேஷ் குமார், தர்மபுரி


"திமுகவின் இந்த அரசியல் பொறுப்பற்ற செயலாகும். ஏனென்றால் மத்திய அரசின் நிதி பெறுவதில் இது சிக்கலை உருவாக்கி உள்ளது. மேலும் லட்சக்கணக்கான தமிழக மக்களின் நல்வாய்ப்பினை திமுக அரசு தடுக்கின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. கோஷங்களை கொள்கைகளாகக் கொண்ட திமுக அரசு செய்கின்ற பல தவறுகளில் இதுவும் ஒன்றாகும். இது போன்ற முடிவுகளினால் மக்கள் மன்றத்தில் திமுக பெரும் எதிர்ப்பினை சந்திக்க வேண்டி இருக்கும்.


தமிழக இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில் முறைகேடுகள் நடப்பததாக முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் குற்றம் சாட்டி வருகிறாரே?

- பி.ரமேஷ், மந்தைவெளி


"முறைகேடுகள் நடப்பது உண்மை தான். பொன் மாணிக்கவேல் சொல்வது சரி தான். தற்போதைய பிரச்சனை பூனைக்கு மணிகட்டுவது யார் என்பது தான். உறுதியாக வரையறுக்கப்பட்ட நேர்மையான இந்துக்களால் அமைந்திடும் வாரியங்கள் தான் தமிழக கோயில்களின் செயல்பாடுகளை சீர்திருத்திட முடியும். ஆளும்கட்சிக்கு நிதி கொடுக்கின்ற காமதேனுவாக இருக்கின்ற காரணத்தினால் திராவிடக் கட்சிகள் இரண்டும் இவ்விஷயத்தில் ஒரே கொள்கையினை கடைப்பிடிப்பது தமிழகத்தின் தலை எழுத்தாக உள்ளது.

Youtube Channel
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS