பொன்மலை கிளை
17-11-2024 அன்று கிளையின் மாதாந்திர கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.பி.எஸ்.எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.விஷ்ணு சகஸ்ரநாமம், லெக்ஷ்மி அஷ்டோத்ரம், கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது. ஸ்தானிகர் ஸ்ரீ.லெஷ்மி நாராயணன் பூஜைகளை நடத்தி வைத்தார். வரவேற்புரைக்கு பின் கிளை பொருளாளர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் வரவு செலவு கணக்கை வாசித்து ஒப்புதல் பெற்றார். கிளைத் தலைவர் 03-11-2024 அன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி, தாம்ப்ராஸ் மாத இதழ் தாம்ப்ராஸ் வளர்ச்சி 2025ம் ஆண்டு அமைப்பு தேர்தல் பற்றியும் உரையாற்றினர். கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.ராமதாஸ் உபதலைவர் ஸ்ரீ.எல்.ராமநாதன், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.லதா, இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ரமேஷ், ஸ்ரீ.பரத், ஸ்ரீ.குணசீலன், ஸ்ரீ.லெக்ஷ்மிநாராயணன், ஸ்ரீ.வெங்கட்ராமன், ஸ்ரீ.ரெங்கராஜன், ஸ்ரீ.சுந்தரராஜன், ஸ்ரீ.முரளி, ஸ்ரீ.நாகராஜன், ஸ்ரீமதி.லலிதா வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளை பொருளாளர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் நன்றி தெரிவிக்க ஸ்வஸ்தி வாசகம் தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
திருச்சி மாவட்டம் - அம்மாமண்டபம் கிளை
24-11-2024 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது. மறைந்த குணச்சித்திர நடிகர் கலைமாமணி ஸ்ரீ.டெல்லி கணேஷ் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொருளாளர் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். அனைவரும் ஒப்புதல் வழங்கினர். தாம்ப்ராஸ் அமைப்பின் 45ம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. முன்னாள் திருச்சி மாவட்டத் தலைவர் ஸ்ரீ.விஸ்வநாதன், திருவானைக்காவல் கிளைத் தலைவர் ஸ்ரீ.பாஸ்கரன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.கண்ணன், உபதலைவர் ஸ்ரீ.சேஷாத்திரி, ஆலோசகர் ஸ்ரீ.ரவி, செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.ராமநாதன், ஸ்ரீ.ரவி, ஸ்ரீ.சுந்தரேசன், ஸ்ரீ.நாகசுப்பிரமணியன், ஸ்ரீ.ராஜகோபால், ஸ்ரீமதி.கோமதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தேர்தல் அதிகாரியாக ஸ்ரீ.பி.ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டார். நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
01-12-2024 அன்று கிளையின் சார்பாக தாம்ப்ராஸ் 45ம் ஆண்டு துவக்க விழா கிளைத் தலைவர் ஸ்ரீ.சுதர்சனம் தலைமை வகிக்க திருச்சி மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் முன்னிலை வகித்தார். உபதலைவர் ஸ்ரீ.சேஷாத்திரி வரவேற்புரையாற்றினார். மாணவ, மாணவிகளுக்கு பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, ஸ்லோகப் போட்டி, மாறுவேடப் போட்டி நடத்தப்பட்டது. ஸ்ரீமதி.எம்.ராதா (பிரின்சிபல்) கலைவாணி மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஸ்ரீமதி.பத்மாவதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவசான், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ஏ.ஆர்.சம்பத் (OFT) கிளைப் பொருளாளர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ.ரவி, ஸ்ரீ.சுந்தரேசன், ஸ்ரீ.ராமநாதன், ஸ்ரீ.ராஜகோபால் ஸ்ரீ.ராமசந்திரன், ஸ்ரீ.வாசுராவ், ஸ்ரீ.மதி.சித்ரா, கிளை மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.நளினி, ஸ்ரீமதி.கோமதி மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர். பள்ளி ஆசிரியர்கள் போட்டியின் நடுவராக செயல்பட்டனர். கிளை செயலாளர் ஸ்ரீ.கண்ணன் நன்றியுரையாற்றினார்.
10-12-2024 அன்று ஸ்ரீரங்கம் கிளை அம்மாமண்டபம் கிளை கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீ.ஜெகந்நாதன் ஸ்ரீ.சுதர்சனம், செயலாளர் ஸ்ரீ.சம்பத் மற்றும் இரண்டு கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு கிளைகளும் இணைந்து விசுவாவசு வருட பஞ்சாங்கம் அச்சடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் - ஜெய்ஸ்ரீகார்டன் கிளை
25-11-2024 கிளையின் சார்பாக சிங்கபெருமாள் திருக்கோவில் ஓடக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயர், தாயார் சன்னதியில் லோக nக்ஷமத்திற்காக கார்த்திகை தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யப்பட்டது.
01-12-2024 லோகnக்ஷமம் மற்றும் எல்லோரும் நலமாக இருக்கவும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டி நடத்திப்பட்டது. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
03-12-2024 அன்று இந்து மக்கள் கட்சி நடத்திய சனாதன ஆதரவு கூட்டத்தில் கிளையின் சார்பாக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நடிகை ஸ்ரீமதி.கஸ்தூரி, ஸ்ரீமதி.மதுவந்தியுடன் மகளிர் சனாதனத்தை காக்க உறுதி மொழியேற்றனர்.
06-12-2024 அன்று பந்தல்காரர், ஸ்ரீ.ரமேஷ் அவர்கள் பெண்ணிற்கு விரைந்து திருமணம் நடக்க கிளையின் சார்பாக ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் திருப்பாவை பாராயணம் நடைபெற்றது.
08-12-2024 கிளையின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் ஸ்ரீமதி.பத்மாவதி, ஸ்ரீமதி.பிரபாவதி, ஸ்ரீமதி.விஜயா, ஸ்ரீமதி.ராதா, ஸ்ரீமதி.திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
|