மஞ்சக்குப்பம் கிளை
09-11-2025 அன்று கிளையின் சார்பாக குழந்தைகள் தின விழா கிளைத் தலைவர் ஸ்ரீ.கே.திருமலை தலைமையில் பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.பரகாலஇராமானுஜம் வரவேற்புரையாற்றினார். தாம்ப்ராஸ் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை பள்ளி மாணவிகள் இருவருக்கு வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.ரவிச்சந்திரன் அனைவரையும் பாராட்டி பரிசுகளை வழங்கினார். மாணவ, மாணவியர் வரைந்த ஓவியங்களை ஜவகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் ஸ்ரீ.மனோகரன் திறனாய்வு செய்தார். பொருளாளர் ஸ்ரீ.நரசிம்மன், அரிமா மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.வித்யாஸ்ரீ, ஸ்ரீமதி.கலைச்செல்வி (ஆசிரியர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்டம் - கூத்தப்பாக்கம் கிளை
21-12-2025 அன்று கிளையின் கூட்டம் பொருளாளர் ஸ்ரீ.ஆர்.கணேசன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் துவங்கியது. இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். கடவுள் வாழ்த்து, வேத கோஷத்தை ஸ்ரீ.பூ.சம்பத் வாசித்தார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.வெ.பிரணதார்த்திஹரன் சங்க உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர். உடல் நலம் குன்றியோர் பூரண நலம் பெற ஸ்ரீ மிருத்தியுஞ்ஜய ஜெபம் ஜெபிக்கப்பட்டது. ஸ்ரீமதி.வனஜா வாசுதேவன் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பொருளாளர் ஸ்ரீ.கணேசன் 2026ம் ஆண்டிற்கான காலண்டர் உறுப்பினர்களுக்கு வழங்கினார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.பிரணதார்த்திஹரன் நடைபெற உள்ள மாவட்ட பொதுக்குழு பற்றி எடுத்துரைத்தார். ஸ்ரீ.பாலாஜி, ஸ்ரீ.பக்தவச்சலம், ஸ்ரீ.ஜெகந்நாதன், ஸ்ரீ.பத்மநாபன், ஸ்ரீ.கண்ணன், ஸ்ரீ.பாலாஜி ஸ்ரீமதி.ஜானகி ஸ்ரீமதி.ஹேமலதா, மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.அலமேலு ஸ்ரீவத்ஸன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநில போஷகர் ஸ்ரீ.சம்பத் தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது பற்றி எடுத்துரைத்தார். ஸ்ரீ.பாலாஜி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீ.பாலாஜி நன்றி நவில ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது
|