சாய்பாபா காலனி கிளை
22-11-2025 அன்று ஆஸ்தீக ஸமாஜம் மற்றும் தாம்ப்ராஸ் கிளை இணைந்து உஞ்ஜவிருத்தி பஜனை நடைபெற்றது. அனைவரும் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.
29-11-2025 அன்று ஸ்ரீப்ரஸன்ன மஹா கணபதி திருக்கோவிலில் ஸ்ரீ மஹா பெரியவா விக்ரஹம் மற்றும் பாதுகைக்கும் பூரண கும்பத்துடன் வரவேற்று அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மஹா பெரியவா அருள் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிளைத் தலைவர் ஸ்ரீ.பி.சம்புகுமார் ஸ்ரீ.சிவராமன் தம்பதிகள் செய்திருந்தனர்.
05-12-2025 அன்று ஸ்ரீ பிரஸன்ன மஹா கணபதி திருக்கோவிலில் திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பொருளாளர் ஸ்ரீ.பாலகிருஷ்ணன் ஏற்பாட்டினை செய்திருந்தார். கிளைத் தலைவர் ஸ்ரீ.சம்புகுமார் ஸ்ரீ.ராமசாமி, ஸ்ரீ.சம்பத், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.சந்திரா சம்புகுமார், ஸ்ரீ.கண்ணன் மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.சுதா பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
துடியலூர் நானாநானி ஹோம்ஸில் மஹா பெரியவா விக்ரஹம் ஸ்ரீ பாதுகைக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கிளை அமைப்பு செயலாளர் ஸ்ரீமதி.சுதா பாலாஜி ஏற்பாட்டினை செய்திருந்தார்
|