பேட்டை கிளை
01-06-2025 கிளையின் சார்பாக கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.பி.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஸ்ரீ.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். தலைவர் உரையில் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். சுதந்திர போராட்டத் தியாகி வீரவாஞ்சிநாதன் நினைவு நாளில் செங்கோட்டையில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்த தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீமதி.கோமதி, ஸ்ரீ.சுந்தர்கணேஷ், ஸ்ரீ.நரசிம்மன், ஸ்ரீ.எஸ்.ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.முரளிபட்டர் ஸ்வஸ்தி வாசகம் வாசிக்க மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா நன்றியுரையாற்றினார்.
|