மாடம்பாக்கம் கிளை
21-12-2025 அன்று கிளைத் தலைவர் ஸ்ரீ.வி.ஸ்ரீதர் தலைமையில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டோத்ரம், ஸ்ரீ ராம நாம பஜன் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஸ்ரீ.சங்கர சுப்ரமணியன், செயற்குழு உறுப்பினர்கள். ஸ்ரீ.ஆர்.வி.ரமேஷ், ஸ்ரீ.ரமேஷ், ஸ்ரீ.குருராஜன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.சித்ரா ஸ்ரீதரன், கிளை உறுப்பினர்கள், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணஸ்வாமி சத்சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 04-12-2025 அன்று மாநில செயலாளர் ஸ்ரீ.சங்கரநாராயணன் இல்ல நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கு கிளை சார்பாக சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அவர் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் - வல்லக்கோட்டை
13-12-2025 அன்று புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. கிளைத் தலைவராக ஸ்ரீ சந்திரசேகர சிவாச்சாரியார், பொதுச் செயலாளராக ஸ்ரீ.சரவண சிவாச்சாரியார், பொருளாளராக ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி ஐயர், மகளிரணி செயலாளராக ஸ்ரீமதி.சுகந்தி, இளைஞரணி செயலாளராக, ஸ்ரீ.விக்னேஷ் ஸிவம் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பாலாஜி ஐயர், செங்கை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பத்மநாபன் ஐயர், மாநில செயலாளர் ஸ்ரீ.வெங்கடேஷ் ஐயர், பெரிய காஞ்சிபுரம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சத்தியா சாஸ்திரி, வாலாஜாபாத் கிளைத் தலைவர் ஸ்ரீ.குருமூர்த்தி சிவம், மண்ணிவாக்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சம்பத்குமார் ஐயர், ஸ்ரீ.முத்துவெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது. மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் - கரசங்கால் கிளை
20-12-2025 அன்று புதிய கிளை துவக்க விழா மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.ஞானஸ்கந்தசிவம் முன்னிலை வகித்தார். ஸ்ரீ.ஞானசேகரன் சிவம் வரவேற்புரையாற்றினார். புதிய கிளை நிர்வாகிகளை மாவட்டத் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். தலைவராக ஸ்ரீ.ஞானஸ்கந்தன் சிவம், பொதுச் செயலாளராக, ஸ்ரீ.விக்னேஷ் சிவம், பொருளாளராக ஸ்ரீ.குணசேகர சிவம், மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.சுஜாதா இளைஞரணி செயலாளராக ஸ்ரீ.சந்திரசேகர் குருக்கள், ஆலோசகராக, ஸ்ரீ.சுரேஷ் குருக்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாநில செயலாளர் ஸ்ரீ.வெங்கடேஷ் மாநில செயலாளர் ஸ்ரீ.சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.பட்டாபிராமன், செங்கை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கார்த்திக் பாபு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.பாலாஜி, கூடுவாஞ்சேரி கிளைத் தலைவர் ஸ்ரீ.பாலாஜி குருமூர்த்தி, மாடம்பாக்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஸ்ரீதர், வாலாஜா கிளைத் தலைவர் ஸ்ரீ.குருமூர்த்தி சிவம் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர். செங்கை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்து நன்றியுரையாற்றினார்.
|