மாப்படுகை கிளை
25-11-2024 அன்று பொன்னூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரஹந்நாயகி ஸமேத ஆபத்ஸகாயேஸ்வர் திருக்கோயில் 108 சங்காபிஷேகம் ஸ்ரீருத்ர ஜபத்துடன் துவங்கியது ஸ்ரீ.எம்.சோமஸ்கந்தன் சிவாச்சாரியார் தலைமையில் மூலவர் அம்பாளுக்கு பூஜைகள் மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றது. மேற்படி வைபவத்தில் ஸ்ரீ.ரவிச்சந்திர சிவாச்சாரியார், டிரஸ்டிகள் ஸ்ரீ.மீனாட்சிசுந்தரம், ஸ்ரீ.எஸ்.விஸ்வநாதன், ஸ்ரீ.எஸ்.சந்தானம், கிளைத் தலைவர் ஸ்ரீ.எம்.ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். அருகில் உள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
09-12-2024 அன்று ராமாபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீவிஸ்வநாத ஸ்வாமி ஆலயத்தில் 108 சங்காபிஷேகம், பூஜைகள் மற்றும் ஹோமங்கள் ஸ்ரீ.ஆர்.ஈஸ்வரன் செய்து வைத்தார். கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.எம்.பாலசுப்ரமணியன், ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்தனர். ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர்.
|