ஈரோடு மாவட்டம்

26-10-2024 அன்று முப்பெரும் விழா மாவட்டத் தலைவர் கயிலை ஸ்ரீ.பி.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.சாம்பசிவ சிவாச்சார்யார் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுக்குழுவில் வழங்கப்பட்ட பிராமண சேவா விபூஷண், தனி நபர் விருதுகளை பெற்றவர்களை பாராட்டி மாநிலத் தலைமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ஸ்ரீதரன், நாமக்கல் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.அஜிதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கோபி கிளைத் தலைவர் ஸ்ரீ.சௌந்தர்ராஜன். தாம்ப்ராஸ் மாவட்ட, மாநில அமைப்பின் வளர்ச்சிக்கு அனைவருமே உறுதுணையாக இருக்க கேட்டுக் கொண்டனர். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பி.முரளிதரன் தீபாவளி திருநாளை முன்னிட்டு நம் சமூகத்தினர்களுக்கு புது வஸ்திரம், பெருளாதாரத்தில் பின் தங்கிய நம் சமூகத்தை சார்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஆப்பக்கூடல் ஸ்ரீ.குமார் வாய்ப்பாட்டு பாடினர். மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.முரளி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் ஸ்ரீ.அஸ்வின் பாலாஜி நன்றி தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம் - கோபிசெட்டிபாளையம் கிளை

17-11-2024 அன்று கிளையின் செயற்குழு கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.கே.சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.என்.ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். தலைவர் உரையில் ஹிந்து மதத்தை பற்றியும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நம் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு உதவுவது, சிறப்பாக செயல்படும் நம் சமூகத்தை சார்ந்த சகோதர சகோதரிகளை பாராட்டி கௌரவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் மாதம் 03ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொண்ட கிளை நிர்வாகிகளை பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது. கிளை உபதலைவர் பேசுகையில் மாணவ, மாணவிகளுக்கு அவர்களது கல்வி தரத்தை மேம்படுத்த ஆலோசனைகள், பகுதி நேர வகுப்புகள் நடத்துவது மற்றும் நமது கலாச்சாரத்தை பின்பற்றுவது பற்றியும் தெரிவித்தார். கிளை மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.கிருஷ்ணலதா நன்றி தெரிவித்தார்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS