- திருச்சுழி நகர் கிளை
23-11-2025 அன்று தாம்ப்ராஸ் புதிய கிளையின் துவக்க விழா கூட்டம் மாவட்டத் தலைவர் ஸ்ரீவாரி.வி.முத்து பட்டர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கடவுள் வாழ்த்து, சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. புதிய நிர்வாகிகளை மாவட்டத் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். கௌரவத் தலைவராக ஸ்ரீ.தெய்வசிகாமணி தலைவராக மானூர் ஸ்ரீ.நடராஜன் உபதலைவராக ஸ்ரீ.சுந்தர்ராஜன், பொதுச் செயலாளராக ஸ்ரீ.கோவிந்தராஜன், பொருளாளராக ஸ்ரீ.சந்திரமோகன், மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.சிவசங்கர், இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.சுந்தரமூர்த்தி சிவம், ஆலோசகராக ஸ்ரீ.ரமணன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்டத் தலைவர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார் மற்றும் நன்றியுரையாற்றினார்.
|