தில்லைஸ்தானம் கிளை
26-04-2026 அன்று கிளையின் கூட்டம் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. ஸ்ரீ பராபவ வருஷ பஞ்சாங்கம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு நன்கொடை அளித்த ஸ்ரீ.என்.கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆலோசகர் ஸ்ரீ.பி.ராமச்சந்திரன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
தஞ்சாவூர் மாவட்டம்
06-06-2026 அன்று இளைஞரணி சார்பாக 92ம் ஆண்டு 27 கருட சேவையை முன்னிட்டு மாவட்ட இளைஞரணி செயலாளர் அட்வகேட் ஸ்ரீ.பா.ராகவன் அவர்கள் தலைமையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீ.வி.ஏ.கிருஷ்ணன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாநில இணைச் செயலாளர் ஸ்ரீ.ஜெ.சுவாமிநாதன், மாவட்ட ஆலோசகர் ஸ்ரீ.நந்தகுமார், ஸ்ரீ.ராமகிருஷ்ணன், ஸ்ரீ.கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டு சேவை செய்து சிறப்பித்தனர்.
|