திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணி கிளை

25-08-2026 அன்று கிளையின் செயற்குழுக்கூட்டம் மாநில ஆலோசகர் ஸ்ரீ.குருராஜராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஸ்ரீ.குணசேகரன், அமைப்புச் செயலாளர். வந்தவாசி ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி கிளைத் தலைவர் ஸ்ரீ.சேகர் தனது உடல் நலக் குறைவு காரணத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் தெரிவித்தார். அதனை கிளை நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். புதிய தலைவராக ஸ்ரீ.மதன்குமார் அவர்களை நிர்வாகிகள் அனைவரும் ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர். ஸ்ரீ.சேகர் அவர்களை மாவட்ட ஆலோசகராக மாவட்டத் தலைவர் நியமித்தார். கிளையின் மூத்த உறுப்பினர் ஸ்ரீ.செல்லப்பா அவர்களுக்கு ரூ.2000/- உதவித் தொகையாக வழங்கப்பட்டது. உபாகர்மா நோட்டீஸ் அனைவருக்கும் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. ஸ்ரீ.பாஸ்கர் நன்றியுரையாற்றினார்

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS