தென்பாதி மற்றும் சீர்காழி
17-09-2024 அன்று விசாலாக்ஷி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில் இரண்டு கிளைகளும் இணைந்து மாவட்டத் தலைவர் கடவாசல் ஸ்ரீ.ரமணன் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. தென்பாதி கிளைத் தலைவர் ஸ்ரீ.அருள் வைத்தியநாதன் வரவேற்புரையாற்றினார். மகாகவி பாரதியாரின் நினைவை போற்றவும் எழுத்து, ஆன்மீகம், இயற்கை விவசாயம் போன்ற துறைகளில் சிறப்பாக சேவையாற்றிய கீழ் குறிப்பிட்ட நபர்களுக்கு சேவைச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
1. டாக்டர் கோதண்டராமன் மருத்துவம் மற்றும் ஆன்மீக சேவை
2. டாக்டர் ஸ்ரீ.பன்னீர் செல்வம் மருத்துவம் மற்றம் ஆன்மீக சொற்பொழிவாளர்
3. சிமிழி ஸ்ரீ.காசிராமன் ஆன்மீக சேவை
4.ஸ்ரீ.சீதாராமன் எழுத்தாளர் மற்றும் கவிஞர்
5. ஸ்ரீ.வரதராஜன் (ஜீனியர் தேஜ்) எழுத்தாளர்
6. சேலம் ஸ்ரீ.நாக சுப்ராஜராவ் ஆன்மீக எழுத்தாளர்
7. ஸ்ரீ.பாலாஜி சங்கர் இயற்கை விவசாய விஞ்ஞானி
8. ஸ்ரீமதி.கௌசல்யா ஆன்மிக சொற்பொழிவாளர்
9. ஸ்ரீமதி.மீனாட்சி ஸ்ரீனிவாசன் ஆலய நிர்வாக செயல்
10. சட்டநாதபுரம் ஸ்ரீமதி.சரோஜினி நாராயணன் ஆன்மிக எழுத்தாளர்
11. ஸ்ரீ.பாலசுப்ரமணியன் ஆன்மீக சேவையாளர்
டாக்டர் ஸ்ரீ.கோதண்டராமன், டாக்டர் பன்னீர்செல்வம் இருவரும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி, மாணவ, மாணவிகள் 35 பேருக்கு பொன்னாடை அணிவித்து அறிவுச்சுடர் விருது மற்றும் கணினி பேக் வழங்கி கௌரவித்தனர்.
மகாகவி பாரதியார் நிiவை போற்றும் விதமாக போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். டாக்டர் இராதாகிருஷ்ணன் தலைமையில் சீர்காழி கிளைத் தலைவர் ஸ்ரீ.தியாகராஜன், மாநிலச் செயலாளர் ஸ்ரீ.சசிகோபாலன் (BSNL) ஸ்ரீமதி.ராதா வெங்கட்ராமன், ஸ்ரீ.பத்ரிநாராயணன், மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.ஹேமமாலின், மாநில செயலாளர் காவலம்பாடி ஸ்ரீ.ஜெயபிரகாஷ், மாவட்ட மாணவியரணி செயலாளர் குமாரி அமிர்தவர்ஷினி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்து சிறப்பித்தனர். மாவட்டத் தலைவர் கடவால் ஸ்ரீ.ராமன் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை ஸ்ரீமதி.சரோஜா தாமோதரன் தொகுத்து வழங்கினார். சீர்காழி ஸ்ரீ.ஆர்.சீதாராமன் நன்றி தெரிவிக்க தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
|