பெரம்பூர் கிளை
16-11-2025 அன்று கிளையின் சார்பாக தாம்ப்ராஸ் எழுச்சி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் ஸ்ரீ.சந்திரமௌலி சத்திய பிரமாண உறுதிமொழி வாசிக்க இளைஞர்கள் உறுதிமொழியேற்றனர். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வட சென்னை மாவட்டம் - கொரட்டூர் கிளை
26-10-2025 அன்று கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.ஸ்வாமிநாதன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. வட சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சுவாமிநாதன் வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி ஆண்டறிக்கை வாசித்தார். மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.தைலா ஸ்வாமிநாதன் மற்றும் இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கணேசன் கிளை செயல்பாடுகள் அறிக்கை சமர்ப்பித்தனர். கிளைப் பொருளாளர் ஸ்ரீமதி.துர்கா பிரசாத் வரவு செலவு கணக்கினை சமர்ப்பித்தார். அனைவரும் ஒப்புதல் வழங்கினர். மாநில மூத்த உபதலைவர் ஸ்ரீ.பாலசுப்ரமணியன், மாநில துணை பொதுச் செயலாளர் ஸ்ரீ.இராமநாதன் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சதீஷ்குமார் பெரம்பூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.சந்திரமௌலி, முகப்பேர் கிளைத் தலைவர் ஸ்ரீ.குமார் திருவொற்றியூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.மதுசூதனன், அம்பத்தூர் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.ராஜேஸ்வரி சுவாமிநாதன், அண்ணா நகர் கிளைத் தலைவர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு +2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி சிறப்புறையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீ.நாராயணராஜா நன்றியுரையாற்ற ஸ்வஸ்தி வாசகம், தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
சென்னை (வடக்கு) மாவட்டம் - கொரட்டூர் கிளை
26-10-2025 அன்று கிளையின் சார்பாக கந்த சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ.சாய்குமார் குழுவினர்கள் நாமசங்கீர்த்தனம் நடைபெற்றது. நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சாமிநாதன் கிளை துணைத் தலைவர் ஸ்ரீ.நாராயணராஜா ஆகியோர் இசைக்குழுவினரை கௌரவித்தனர். கார்த்திகை மாதத்தில் உறுப்பினர் இல்லங்களில் கிளை சார்பாக வேத பாராயணம் நடத்தப்பட்டது.
|