கடியாப்பட்டி கிளை
16-11-2025 அன்று கிளையின் சார்பாக எழுச்சி நாள் நிகழ்ச்சி தலைவர் ஸ்ரீ.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஜி.சேகர் கணேஷ் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தாம்ப்ராஸ் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இளைஞர்கள் உறுதிமொழியேற்றனர். ஸ்ரீ.என்.முத்துராமன், ஸ்ரீ.வி.சந்தோஷ், ஸ்ரீ.என்.நாராயணசாமி, ஸ்ரீ.பி.வெங்கடேஷ், குமாரி.கனகலக்ஷ்மி, ஸ்ரீ.ஆர்.கிரி, ஸ்ரீ.சி.பிரகாஷ், ஸ்ரீ.எஸ்.கணேஷ், ஸ்ரீ.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீ.ஆர்.விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.வி.மாலா நன்றியுரையாற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டம் - கடியாப்பட்டி கிளை
16-11-2025 தாம்ப்ராஸ் எழுச்சி நாள் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தாம்ப்ராஸ் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். சத்ய பிரமாண உறுதிமொழி வாசிக்க வி.சந்தோஷ், ஆர்.விக்னேஷ், என்.நாராயணசாமி, என்.சுந்தர், என்.முத்துராமன், பி.வெங்கடேஷ், சி.பிரகாஷ், எஸ்.கணேசன், எஸ்.கனகலக்ஷ்மி ஆகியோர் உறுதிமொழியேற்றனர். பொருளாளர் ஸ்ரீ.பி.சுப்ரமணியன் நன்றி கூறினார்.
19-12-2025 அன்று அனுமன் ஜெயந்தி நடைபெற்றது. மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.லலிதா, பக்தி பாடல்களை பாடினார். ஸ்ரீ.வி.கண்ணன் ஸ்ரீ.ஜி.சேகர் கணேஷ், மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உற்சவ ஏற்பாட்டை செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் - கடியாப்பட்டி கிளை
18-12-2025 கிளை மகளிரணி சார்பாக கோலப்போட்டி நடைபெற்றது. ஸ்ரீமதி.எஸ்.லலிதா, ஸ்ரீமதி.குகப்பிரியா, ஸ்ரீமதி.ராஜேஸ்வரி நடுவர்களாக இருந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீமதி.எஸ்.காயத்ரி, ஸ்ரீமதி.வி.மாலா, குமாரி.ஆர்.சாத்விகா, குமாரி.எஸ்.கனகலெக்ஷ்மி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.ராஜேஸ்வரி நன்றியுரையாற்றினார்.
|