ஸ்ரீவாஞ்சியம் கிளை
-
05-07-2026 அன்று புதிய கிளையின் துவக்க விழா மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.அனந்தராமன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.கணேஷ் சாஸ்த்ரி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.சுதாகர் வரவேற்புரையாற்றினார். கிளைத் தலைவராக ஸ்ரீ.கணேஷ் சாஸ்த்ரி, பொதுச் செயலாளராக ஸ்ரீ.நடராஜன், பொருளாளராக ஸ்ரீ.கார்த்தி, துணைத் தலைவராக ஸ்ரீ.ராஜராஜன் சிவாச்சாரியார், மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.சுந்தரி வாஞ்சிநாதன், இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.முத்துக்குமார், ஆலோசகர்களாக ஸ்ரீ.கிரிதரன் ஸ்ரீ.பிச்சுமணி, அமைப்புச் செயலாளராக ஸ்ரீ.ஸ்வாமிநாத சிவாச்சாரியார் ஆகியோர் பதவியேற்றனர். மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் ஸ்ரீ.ரமணன் மாநிலச் செயலாளர் ஸ்ரீ.சசிகோபாலான், மாநில இணைச் செயலாளர் ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ் மயிலலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீ.சத்யநாராயணன், ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், சிமிழி கிளைத் தலைவர் ஸ்ரீ.பட்டாபிராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினர். இளைஞரணிச் செயலாளர் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீ.குமார் செய்திருந்தார்
|