திருப்புல்லாணி கிளை
22-12-2025 அன்று புதிய கிளை துவக்க மற்றும் புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம் - திருப்புல்லானி கிளை
25-12-2025 அன்று கிளையின் புனரமைப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.வெங்கடேசன் ஐயங்கார் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.ரெகுபதி ஐயங்கார் முன்னிலையில் நடைபெற்றது. ஸ்ரீ.அண்ணாதுரை ஐயங்கார் வரவேற்புரையாற்றினார். கிளைத் தலைவராக ஸ்ரீ.பாலசுப்ரமணியன் ஐயர், கௌரவ தலைவராக ஸ்ரீ.அண்ணாதுரை ஐயங்கார் மற்றும் முத்துகிருஷ்ணன் ஐயங்கார், பொதுச் செயலாளராக ஸ்ரீ.வெங்கடேசன் ஐயங்கார், பொருளாளராக ஸ்ரீ.ராமசுப்ரமணியன் ஐயர், மகளிரணி செயலாளராக ஸ்ரீமதி.பத்மப்ரியா, இளைஞரணி செயலாளராக ஸ்ரீ.நவின் ஐயர் ஆலோசகராக ஸ்ரீ.ரெகுவீரதயாள் ஐயங்கார் மற்றும் ஸ்ரீ.ஜெயராமன் பட்டர், ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீமதி.ரேவதி, ஆகியோர் பதவியேற்றனர். முன்னாள் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.நாகநாராயணன் ஐயர் கிளை செயல்பட வேண்டியது பற்றியும், செய்ய வேண்டிய கைங்கர்யம் பற்றியும் சிறப்புரையாற்றினார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மதுரை ஸ்ரீ.சசிராமன் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பின் சார்பாக அனைவருக்கும் காலண்டர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் செய்திருந்தார். ஸ்ரீ.முத்துகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.
|