-
02-11-2025 அன்று மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஸ்ரீ.கே.கே.சி.ராஜாஸ்வாமி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் பஜனை நடைபெற்றது. வரவேற்புரைக்கு பின் மாநில பொதுக்குழுவில் விபூஷண், பூஷண் மற்றும் தனி நபர் விருது பெற்றவர்களை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். வாலாஜா கிளைக்கு சொந்த இடம் வாங்கி திருமண மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதற்காக தனி குழு அமைக்க கருத்து தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீ.ஸ்ரீதர், வாலாஜா கிளைத் தலைவர், ஸ்ரீமதி.ஆர்.லக்ஷ்மிநாராயணன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.பாலாஜி, பொருளாளர் ஸ்ரீ.வி.என்.சுந்தர் மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.ஸ்ரீமதி பாலாஜி, சோளிங்கர் கிளைத் தலவைர் ஸ்ரீ.தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. கிளை ஆலோசகர் ஸ்ரீ.கே.ஸ்ரீதர் நன்றியுரையாற்றினார்.
|