நகரக் கிளை
20-12-2025 அன்று கிளையின் கூட்டம் கிளைத் தலைவர் டாக்டர்.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. தலைவர் தனது உரையில் உறுப்பினர் சேர்க்கை, தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது பற்றி எடுத்துரைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.வெங்கடேஷ் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.பாலாஜி, கிளைத் தலைவர் ஸ்ரீ.சுந்தரராமன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.காத்திக் பாபு, பொருளாளர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணிச் செயலாளர், ஸ்ரீ.சந்திரசேகரன், கௌரவத் தலைவர் ஸ்ரீ.மஹாதேவன், உபதலைவர் ஸ்ரீ.பாலாஜி, ஆலோசகர் ஸ்ரீ.சம்பத்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளையின் சார்பாக 2026ம் ஆண்டிற்கான காலண்டர் வழங்கப்பட்டது. நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் - மண்ணிவாக்கம் கிளை
24-12-2025 அன்று கிளையின் சார்பாக 179வது ஸ்ரீ தியாக பிரம்ம ஆராதனையை முன்னிட்டு அவர்களின் வம்சாவளி திருநெல்வேலி ஸ்ரீ.நடராஜ பாகவதரின் உஞ்சவிருத்தி சம்ப்ரதாய பஜனை மிக விமரிசையாக நடைபெற்றது. ஆன்மீக அன்பர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
|