சென்னை தென் மாவட்டம்
நங்கநல்லூர் கிளை

28-06-2026 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ.விஜயஷர்மா அவர்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் இணைந்து மஹா சுதர்சன ஹோமம் நடத்தினர். சங்கல்பத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர். குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, பக்திப்பாடல்கள் மற்றும் கர்நாடக இசைப் பாடல்கள் போட்டி நடைபெற்றது. மேலும் கோவை குமாரி ஹரிணி மற்றும் ஸ்ரீமதி.மினி ஆகியோர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்புக் கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.அனிருத்சுரேஷ் தலைமையில் வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது. தென் சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.லலிதா சுகுமார், மாநில ஆலோசகர் ஸ்ரீ.வி.எல்.நரசிம்மன், மாநில செயலாளர் ஸ்ரீ.வெங்கடேஷ், மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஒய்.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நமது கலாச்சாரம் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார். கிளையின் சந்தா தொகையை மாவட்டத் தலைவரின் மூலமாக மாநிலத் தலைவரிடம் வழங்கப்பட்டது. பரத நாட்டியம் ஆடியவர்களுக்கு மாநிலத் தலைவர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். ஓவியப் போட்டி மற்றும் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டி நடுவர்கள் ஸ்ரீமதி.காயத்ரி பாலாஜி, ஸ்ரீ.குருராஜன், ஸ்ரீமதி.லலிதா சுகுமார், ஸ்ரீமதி.ஆனந்தி லக்ஷ்மனன், ஸ்ரீமதி.லலிதா ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் (90ரூ மேல்) பெற்ற நம் சமூக மாணவ, மாணவியரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை மாநிலத் தலைவர் வழங்கினார். நிகழ்ச்சி அரங்கில் நம் சமூதாயத்தைச் சார்ந்த தொழில் முனைவோர்கள் அரங்குகளை மாநிலத் தலைவர் நேரில் சென்று அவர்களை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். கிளை ஆலோசகர் ஸ்ரீ.கே.குருராஜன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது. கிளைத் தலைவர் ஸ்ரீ.அனிருத் சுரேஷ் அவர்களுடன் இணைந்து கிளைப் பொதுச் செயலாளர் ஸ்ரீ.மணி, பொருளாளர் ஸ்ரீ.ரவி, இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.அஸ்வினி, மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.சூர்யஸ்ரீ பாலாஜி, அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீதர், மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.காயத்ரி அனிருத், மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.காயத்ரி பாலாஜி, ஆலோசகர் ஸ்ரீ.குருராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.பாலாஜி, ஸ்ரீ.ராஜகோபால் ஆகியோர் ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS