சென்னை மத்திய மாவட்டம்
அம்பத்தூர் கிளை

15-08-2026 அன்று கிளையின் சார்பாக 80ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில துணைத் தலைவர் ஸ்ரீ.சத்தியமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கிளைத் தலைவர் ஸ்ரீ.லெஷ்மி நாராயணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.சுமித்ரா சிவக்குமார் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.ராஜேஸ்வரி ஸ்வாமிநாதன், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.கிரிஜா ரவி மாநில செயலாளர் ஸ்ரீமதி.வித்யா மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


வட சென்னை மாவட்டம்

02-08-2026 அன்று மாவட்ட நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தலைவர் ஸ்ரீ.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. தனது உரையில் கிளைகள் தங்களது உறுப்பினர் சந்தா தொகை செலுத்துதல், மாநில போஷகர், குடும்ப போஷகர்கள் சேர்த்தல், மாநில அமைப்பிற்கு நிதி ஆதாரத்தைப் பெற்று அதற்கான ஊக்கத்தொகையை பெற்றுக் கொள்ளுதல் மாநிலத் தலைவர் வேண்டுகோளின் படி தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் அறங்காவலர்குழுத் தலைவர் பதவிக்கு தாம்ப்ராஸ் நிர்வாகிகள் விண்ணப்பித்தல் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி எடுத்துரைத்தார். மாநில அமைப்பின் மூலம் பொதுக்குழுவில் வழங்கப்பட உள்ள அனைத்து விருதுகள் தொடர்பான பரிந்துரைகளுக்கு மாவட்டத் தலைவருக்கு நிர்வாகிகள் அனுமதி வழங்கினர். நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS