பாப்பாரப்பட்டி கிளை
23-07-2024 அன்று மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் தலைமையில் பாரத விடுதலைப் போராட்ட தியாகி வீரத்துறவி வத்தலகுண்டு ஸ்ரீ.சுப்ரமணியசிவம் ஐயரின் 99வது நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.மீனாக்ஷி ராஜா, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பாலாஜி, சேலம் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.குருசாமி(எ)பிரபாகரன், ஓசூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.நாகராஜன், கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.சீனுவாசன், காஞ்சி மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.சுரேஷ் காஞ்சி மாவட்ட அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி, தருமபுரி மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.நடராஜ் (எ) கார்த்தி, திண்டுக்கல் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். பாரத மாதா படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு முதல் தாம்ப்ராஸ் அமைப்பு சார்பாக அன்னாரது நினைவு நாளில் நற்பணிகள் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
|